சனி, 26 மே, 2007 /

அதனால் தானே ஈரோட்டு ராமசாமி பெரியார் ஆனார், தந்தையானார்.

நண்பர் ஒருவர் என்னிடம் நீண்ட நாட்களாக ஒரு திருக்குறளுக்கு விளக்கம் கேட்டார். அதிக வேலை சுமை காரணமாக நான் அதை குறித்து கவலைபடாமல் திருக்குறளுக்கு தெளிவுரைகள் தெருவெல்லாம் கிடைக்கிறதே அதை அவர் பார்த்துக் கொள்வார் என்று விட்டு விட்டேன். ஆனால் அந்த நண்பர் அதை தவராக பொருள் கொண்டு அந்த திருக்குறளுக்கு தவரான பொருளை கற்பித்து பரப்புரை செய்ய முயலுகிறார் எனவே நான் அறிந்த அல்லது எனக்கு அறிவிக்கப்பட்ட பொருளை இங்கு பதிவு செய்தால் திருக்குறள் தவராக திருப்பபடுவதை தடுக்கும் முயற்ச்சியில் எனது பங்களிப்பையும் செய்தவன் ஆவேன். ஒழுக்கமுடைமையில் வரும் அந்த குறள் இது தான்

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொக்கும் செய் தொழில் வேற்றுமையால் என்று பிறப்பால் அனைவரும் சமமானவர்கள், அவர்கள் மேற்கொள்ளும் தொழிலால் அவர்கள் சிறப்பு அறியப்படும் என்ற திருவள்ளுவரை எவ்வாறு நண்பர் சாதிய வேறுபாடுகளுக்கு சாட்சிக்கு அழைத்தார் என்று விளங்கவில்லை. நண்பர் சுட்டிக்காட்டிய குறளுக்கு முன் குறளில் நல் ஒழுக்கம் உடையது நற்குடி ஒழுக்கத்தில் குறைவு ஏற்ப்பட்டால் அவன் பிறப்பு இழிந்த பிறப்பாய் விடும் என்பதை வலியுருத்த

ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்

என்று எழுதியவர் அடுத்த பாடலில் கற்றறிந்த நற்குடியில் அதாவது நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவன் அவனுக்கு கற்பிக்கப்பட்ட அவனுக்கு சொல்லிக்கொடுக்கபட்ட சான்றான்மை அல்லது அறிவு அல்லது பயிற்ச்சி இவற்றை மறந்தாலும் அதை திரும்ப படித்து அறிந்து கொள்ளமுடியும் ஆனால் நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவன் ஒழுக்கத்தில் தவறினால் எல்லாமே கெட்டுவிடும் என்று வலியுறுத்தி

மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

என்று பாடினார் என்றால் அது மிகையாகாது என்பதை நண்பர் உணரமறந்தது அல்லது உணர மறுத்தது ஏனோ. எமக்கு விளங்கவில்லை. பார்ப்பான் என்னும் ஒரு சொல் அவரை குழப்பியிருக்கும் என்றே கருதுகிறேன் அவருக்கு அன்போடு சொல்கிறேன். பார்பான் என்ற சொல் அந்தனன் அல்லது நல் ஒழுக்கமுடைவன் என்ற பொருளில் வருகிரது. அந்தணன் அல்லது பார்ப்பான் என்பனுக்கு இலக்கணம் கூறிய வள்ளுவர்

அந்தணன் என்போன் அறவோன் மற்றெவ்வுயிற்க்கும்

செந்தன்மை பூண்டு ஒழுகலான்

என்று கூறியிருக்கிறார். எனவே பிறப்பால் பார்பான் என்று ஒரு சாதியும் கிடையாது. அவன் மேற்க்கொள்ளும் தொழில், அவன் பண்பாட்டை பொருதே அவர் உயர்ந்தவனா அதாவது பார்ப்பானா அதாவது அந்தணனா என்று அறியப்படுகிறது. சொத்துரிமை சமூகத்தில் தகப்பன் தன் சொத்தை தன் மகனுக்கு கொடுதாலும் மகனால் அது அழிக்கப்பட்டால் அவனுடைய சொத்து அவனுக்கு இல்லாமல் போவதுபோல்தான். உயர்ந்த குணங்களை கொண்ட ஒருவனுக்கு பிறக்கும் வாரிசுக்கும் சில மரியாதைகள் சமூகத்தால் கொடுக்கப் படுகிறது. அதை அவன் சிதைதால் அவன் அந்த மரியாதைக்கு தகுதியில்லாதவன் ஆகிறான் அது தானே நடந்தது? அதனால் தானே ஈரோட்டு ராமசாமி பெரியார் ஆனார், தந்தையானார்.

கருத்துகள் (1) / Read More

/

பரப்பியவர்கள் தவறு இழைத்திருக்கிறார்கள்

ப்ராக்மண சத்ரிய விசாம் சூத்ராணும் ச் பரந்தப கர்மாணி ப்ரவிபக்தானி ஸ்வபாவப்ரபவைர் குணை: ஷமோ; தமஸ்தப: ஷெளசம் சாத்திரார் ஜவமேவச ஞானம் விக்ஞான மாஸ்திக்யம் ப்ரக்மகர்ம ஸ்வபாவஜம் ஷெளர்யம் தேஜோ த்ருதிர் தாஷ்யம் யுத்தே சாப்யலாயனம் தான மீச்வர பாவஸ்ச்ச சாத்ரம் கர்ம ஸ்வபாவஜம் க்ருஷி கோரச்ய வானிஜ்யம் வஷ்ய கர்ம ஸ்வபாவஜம் ப்ரிசர்யாத்மகம் கர்ம சூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம். இயற்க்கை அமைந்துள்ள அவர்ரவர் குணங்களுக்கு ஏற்ப அவர்களின் தத்தமது செய்கைகளுக்கு ஏற்ப்ப அந்தணர், ஆள்வோர், வணிகர், உழைப்போர் என பிரித்து அறியப்படுகின்றனர். அமைதி, சுய அடக்கம், தவம், தூய்மை, பொருமை, நேர்மை, விவேகம், அறுவு மற்றும் ஆத்திகம் இத்தகைய தன்மைகளை உடையவர்கள் அந்தணர்கள் ( இதைத்தான் வள்ளுவம் அந்தணன் எந்போன் அறவோன் என்று வலியுருத்துகிறார்) தீரம், வலிமை, உறுதி, வளமை, போரில் வீரம், ஈகை மற்றும் தலைமை பண்புகளை கொண்டோர் ஆள்வேர் அதாவது சத்திரியர் எனவும் விவசாயம், மற்றும் கால்நடை வளர்ப்பு, வணிபம் இவற்றை விரும்பி ஏற்றுக்கொள்பவர்கள் வியபாரிகள் என்றும். உடல் உழைப்பால் பொருள் ஈட்ட விரும்புபவர்கள் உழைப்பாளர் அதாவது சூத்திர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயான் ஸ்வர்மோ விகுண; பரதர்மாதஸ்வனுஷ்டிதாத் ஸ்வபாவ நியதம் கர்ம குர்வன்னாப்னோதி கில்பிஷம் என்னும் சுலோகத்தினால் நம் அறிவது. இயற்க்கையாக தாம் கொண்டுள்ள குணத்தின் படி ஒருவன் தன் கடமைகளை ஏற்று செயல்பட வேண்டும். தன் சுபாவத்தை மாற்றாமல் செயல்பட்டால் அது அவனையும் அந்த தொழிலையும் பாதிக்காது. இவை இறைவனாக ஒரு பிரிவினாரால் பார்க்கப்படும் கண்ணன் கீதையில் கூறிய கருத்துக்கள். யாதவர் குலத்தில் பிறந்த கண்ணன் எப்படி தன்னையே தாழ்த்தும் கருத்துக்களை சொல்லியிர்க்க முடியும். அதனால் தானே மெற்ப்படி கருத்துக்கள் அமிழ்தமாக தெரிகின்றன. ஆனால் அவனையே கடவுளாக கருத கூடியவர்கள் எவ்வாறு அவர்ரவர்களின் சுபாவத்தை பொருத்து தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுருத்த பட்டதற்க்கு மாறாக பிறப்பால் தொழிலை கூற முற்ப்பட்டார்கள்??? இவற்றைத்தான் ஆரிய மாயையாக நாம் இங்கு குறிப்பிட்டதும். எம் தலைவர்கள் முன்பே குறிப்பிட்டதும். இவற்றை உள்வாங்கிகொண்டு நாம் மேலே செல்வோமானால் அமைதி, சுய அடக்கம், தவம், தூய்மை, பொருமை, நேர்மை, விவேகம், அறிவு, ஆத்திகம் இவற்றை பண்புகளாக கொண்டவரின் மகனாகவொ மகளாகவோ பிறப்பவருக்கு மகனாக பிறப்பவருக்கும் இத்தகையா குணங்கள் அமைந்திருக்கும் என்பது நிச்சயமில்லை எனவே தகப்பன் அந்தனனுக்குறிய குணங்களை கொண்டிருந்து மகன் உழைப்பவர்களுக்குறிய குணங்களை கொண்டிருந்தால் அவன் உழைப்பாளி என்பது உறுதியாகிறது. எனவே தர்க்க வாதத்திற்க்கு கூட ஏற்ப்புடையதில்லாத ஒரு கருத்தை அதாவது பிறப்பால் சாதி பிரிவினையை கடவுளின் பெயராலும், கூறப்பட்ட செய்திகளை திசைதிருப்பியும் பரப்பியவர்கள் தவறு இழைத்திருக்கிறார்கள் என்றால் யாரும் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

கருத்துகள் (0) / Read More

/

பார்ப்பான் அகத்தில் பால் பசு அய்ந்துண்டு

சதுர் வேதம் ஆறுவகைச் சாத்திரம் பல

தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்

விதம் வித மான வேறு நூல்களும்

வீணான நூலகளே என்று ஆடுபாம்பே

இது ஏதோ கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர்கள் எழுதியதோ அல்லது இன்றைய தி. க வினர் எழுதியதோ அல்ல மாறாக மாறத இறைநம்பிக்கையால் சித்தத்தை சிவன்பால் வைத்து அஷ்டமாச்சித்திகளையும் கைக்கொண்ட சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் பாடல். இவர் இதற்க்கு காப்பி ரைட் எல்லாம் வாங்கி இவை ஒரு சமூகத்திற்க்கு மட்டுமே உரிமை என்று வரைமுறைகளெல்லாம் விதித்திருக்கவில்லை. இவர்கள் கடவுளை கற்சிலைகளிலும் கர்ப்பகிரக மண்டபங்களிலும் தேட வில்லை மாறாக தன்னில் தேடி தன்னில் உணர்ந்து தரணிக்கும் சொன்னார்கள் இவர்களால் எப்படிச் சாத்தியமாயிற்று வாருங்காள் திருமூலர் ஒரு தொடக்கத்தை தருகிறார்.

பார்ப்பான் அகத்தில் பால் பசு அய்ந்துண்டு

மேய்ப்பாரும் இல்லாமல் வெறித்து திரிவன

மேய்ப்பாரும் இருந்து மேய தலைப்பட்டால்

பால் பசு அய்ந்தும் பாலாய்ச் சொறியுமே

பார்ப்பான் என்ற சொல்லை எடுத்துக்கொண்டு அவாள் அவாளுக்குடையது என கருத விளைவார்கள் எனில் அவர்களுக்கு ஒன்றை பணிவுடன் சொல்கிறேன். பார்ப்பான் என்ற சொல் இங்கு மானிதர்களையே குறிக்கிறது. சரி விசயத்திற்க்கு வருவோம். உயிர்களின் நுகர்தலுக்கான 5 இந்திரியங்களான கண், காது, மூக்கு, வாய் மற்றும் சிற்றின்ப உறுப்புகள் மேய்ப்பவர் இல்லாத பசு மாடு போல் எல்ல இடங்களிலும் மேய முயற்ச்சிக்கும். நல்ல மேய்ப்பான் சரியாக வழிநடத்தினால் 5 பசுக்களும் நன்றாகப் பாலை(ஞானத்தை) சுறக்கும். நாம் முன்னர் அறிந்த பசுவாகிய உயிருடன் ஞானம் கூடினால் இறைத்தன்மையை நோக்கி உயிர் பயணிக்கும். இந்த 5 இந்திரியங்களை அடக்கி அட்சி செய்ய வேண்டும் என்பதை உணர்த்த தானோ நம் முன்னோர்கள் 5 தலை நாகத்தின் மீது திருமால் சயனித்திருப்பதாக கூறியிருப்பார்களோ???? அதைத்தானோ

ஜந்தலை நாகமடி

ஆதாயங் கொஞ்சமடி

இந்த விடந்தீர்க்கும்

எம் இறை கண்டாயே


என்ற அகப்பேய்ச் சித்தரின் பாடல் அறிவுறுத்துகிறது.

கருத்துகள் (0) / Read More

/

ஆலயங்களும் அதன் நோக்கங்களும் பாழ்பட்டு விட்டன.

ஒரு இல்லத்தில் சாப்பரை ஒலிக்கிறது, மற்ற ஓர் இல்லத்தில் குழந்தையின் அழுகுரல், பிருதோர் இல்லத்தில் திருவிழாக் கோலம் மற்றோர் இல்லத்தில் கணவன் மனைவியும் புணர்ந்து மகிழ்கின்றனர். இப்படித்தான் பண்பில்லாத அந்த பரமன்(இறைவன்) படைத்து விட்டான். இதுதான் உலக இயல்பு என்பதை உணர்ந்தவர்கள் இன்னாதததை தவிர்த்து இனியவற்றை கொள்வார்காள் என்பதை உணர்த்தும் பழந்தமிழ் பாடல்

ஓரில் நெய்தல் கறங்க, ஓர் இல் ஈர்த்தன் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி அனியப், பிரிதோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப் படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்! இன்னது அம்ம, இவ்வுலகம்; இனியது கான்க, இதன் இயல்புணர்ந் தோரே இப்பாடலில் இறைவனை பண்பில்லாதவன் என்பதை பண்பாடு இல்லாதவன் என்று அந்த புலவர் சாடுவதாக நாம் பொருள் கொள்ளலாம், நாம் சற்றே மாற்றி சிந்திப்போம். இறைவன் உருவமற்றவன் ஆனால் வேண்டிய உருவை கொள்ளும் ஆற்றல் உடையவன் அவனுக்கென்று எந்த பண்பும் (நிறம், குணம், அல்லது நிறந்திர வடிவம்) கிடையாது எனவே தான் அவன் பண்பிலாளன் என்று கூறியதாக கொள்வோமேயானால் நமக்கு பல உண்மைகள் புலப்படும். எந்தவித பண்புகளும் இல்லாத இறைவனை (பொருட்களுக்குதான் நிலையான பண்புகள் உண்டு எனவே இறைவன் பண்பு உள்ளவன் எனில் அவன் ஜடப்பொருளாகிறான்) உருவகப்படுத அருவ உருவமாக இறைவனை லிங்கம் வடிவாக நம் முன்னோர்கள் கற்ப்பித்தார்கள், லிங்கம் என்னும் சொல்லை பிரித்து பொருள் கொள்வோமானால் லிங்+கம் லிங்-ஒடுங்குதல் கம்-விரிதல். உலகம் பிரலய காலத்தில் அழியும் போது அனைத்து உயிர்களும் இறைவனோடு ஒடுங்கி இருந்து இளைப்பாறிருக்கும் பின்பு அவை பிறவி எடுக்கும் என்பதை உணர்த தான் லிங்கம் என்ற அமைப்பை கற்ப்பித்தார்கள். இதன் மூலம் எதை உணர்த்த நம் முன்னோர்கள் முயன்றார்கள்? நாம் முன்னரே அறிந்தவாரு இறைவன் - அப்பழுகில்லாத உயிர் பசுவாகிய நமது உயிர் - ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கலால் மூடப்பட்ட உயிர் இறைவன் ஆனவம் கன்மம் மயை ஆகியவற்றை எரித்தவன் என்னும் பொருளில் தான் இறைவனை(சிவன்) முப்புரங்களை எரித்தவன் என்றும் கற்ப்பித்தார்கள். இவற்றை உணர்வோமானால் நமக்கு ஒரு உண்மை புலப்படுகிறது நாமும் இறைவனும் உயிர்களே என்பதுதான் அது. ஆனால் இறையாகிய உயிர் அப்பழுக்கற்றது மாறாக நாம் ஆனவம் கன்மம் மயையால் கவர்செய்யப்பட்டு இறுக்கிறோம். நாம் இறைவனின் ஆற்றல்கள் குறித்து நம் முன்னோர்கள் கற்ப்பித்ததை சற்றே கவனத்தில் கொள்வோ. இளைப்பாறுதல் கருதி இறைவனால் ஏற்ப்படுத்த படும் பிரலய காலத்தில் தன்னுள் ஒடுங்கிய உயிர்கள் தங்களின் ஆனவம், கன்மம், மாயையை விலக்கி கொள்ளும் பொருட்டு இறைவன் அவைகள் மீண்டும் பிறக்க சித்தத்தில் நினைக்கிறான். அந்த நினைவின் அந்த ஆற்றலின் பெயரே பராசக்தி. அதைத்தான் சக்தியாக கற்ப்பித்தார்கள் மேலும் இறைவனும் அவன் ஆற்றலும் வெவ்வேறானவை அல்ல அவை இரண்டும் ஒன்று என்பதை விளக்கவே சிவனின் பாதியாக சக்தியாக கற்ப்பித்தார்கள். இறைவனின் சித்ததில் உதித்த அந்த என்னம் பராசக்தி, அதன் படி நிலைகளாக அவனின் விருப்பத்தை இச்சா சக்தி, அதற்க்கான அவனின் அறிவை ஞன சக்தியாகவும், அவனின் செயலை கிரியா சக்தியாகவும் கூறினார்கள். பதியாகிய இறைவனின் இந்த இச்சா, கிரியா, ஞான சக்திகள் அனைத்தும் உயிராகிய பசுக்களிடமும் அமைந்துள்ளன ஆனால் அவை மும்மலங்கலாகிய ஆனவம், கன்மம், மாயை என்பவற்றால் சூழபட்டுள்ளதால் அதன் வீரியம் மிகவும் குறைவாக இருக்கிறது, இந்த வீரியம் குறைவாக உள்ள உயிர்களின் சக்தியும் இறைவனின் சிந்தையும் ஏதாவது ஓரிடத்தில் இனையும் போது பிறப்பு நிகழ்கிறது என்பதாக கற்ப்பிக்கிறார்கள். பிறப்புக்கு இறைவன் காரணமல்ல இறைவன் உயிர்கள் உய்யும் பொருட்டு அதற்க்கான வாய்ப்புகளை மட்டுமே ஏற்படுத்தியிருக்கிறான். அந்தந்த உயிர்களின் ஆனவம், கன்மம், மாயை பொருத்து அவர்களுக்கு பிறப்பு ஏற்படுவதாக கற்ப்பிக்கப்படுகிறது. இறைவனைப் பொருதவரை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் ஒரு சூத்திரத்திற்குட்பட்டு இயங்குவதற்க்கான அமைப்பை ஏற்படுதியிருக்கிறான். ஆனால் மனிதர்களோ ஆனவம் கன்மம் மாயையால் சூழப்பட்டு சாதி மத வேறுபாடுகளை இறைவனின் பெயராலே ஏற்ப்படுத்தி விட்டார்கள். நல்ல நோக்கத்துடன் தொடங்கப்படும் சில செயல்கள் சில நேரங்களில் கெடுதலை கொடுப்பது போன்றே. ஆலயங்களும் அதன் நோக்கங்களும் பாழ்பட்டு விட்டன. மெள்டீக மூடர்களின் கைப்படும் நல்ல கருவிகளும் தீமை பயப்பது போலத்தான். பார்பனியர்களின் பார்பனியத்தின் கைப்பட்ட ஆலயங்கலிலும் சாதி சழக்குகள், பித்தலாட்ட பிதற்றள்கள். மூட நம்பிகைகளின் முட நாற்றமும் ஏற்பட்டுவிட்டது. அனைத்து அழிவுகளுக்கும் சிதைவுகளுக்கும் காரணம் ஆரிய மாயைதான்! ஆரிய மாயையே தான்.

கருத்துகள் (0) / Read More

/

பசுமாட்டின் வாலை பிடித்தாலே புண்னியம்

தமிழ் மறைகளின் மூலம் பதி, பசு, பாசம் என்ற மூன்றை பற்றிய அறிவுருத்தலே சமயமாக பார்க்கப்படுகிறது. இவற்றை பற்றிய விளககங்களுகு முன்னர் உயிர் தொடர்பான உண்மைகளை விளங்கிக்கொள்ள வேண்டும். இன்றைய அறிவியல் உலகில் குளோனிங் முறையில் உயிரிணங்களை உருவாக்க இயலுகிறது எனினும் உயிர் என்பது இதுதான் என்று யாராலும் எடுத்துக்காட்ட இயலவில்லை. உயிர் இதயத்துடன் தொடர்புடையது, மனம் புலன்களுடன் தொடர்புடையது. மனம் 5 புலன்கலின் உதவியால் உலகில் இருக்கும் அனைத்தையும் அடைய ஆசை கொள்கிறது அகிலத்தையே ஆளுபவர்களும் அதற்க்கும் மேல் என்ன என்று ஆவல் கொள்கின்றனர். இந்த ஆசை வயபட்ட மனம் உயிரின் தூய்மையை மேலும் மேலும் குறைக்கிறது. இந்த தூய்மையற்ற உயிரே பசு அதாவது உயிரினங்கள். உயிரினங்களுக்கு தீமை செய்யக்கூடாது என்ற பொருளிள் நம் முன்னோர்கள் பசுவுக்கு தீங்கிழைக்காக்கூடாது என்ற கருத்தியலை ஏற்படுத்தினார்கள் அதையே நம்மவர்கள் பசு மாட்டுக்கு தீங்கிழைக்க கூடாது என்று கூறிவிட்டு சக மனிதர்களை கொடுமை படுத்த தொடங்கிவிட்டர்கள். பசுமாட்டின் வாலை பிடித்தாலே புண்னியம் என்று கருதி எல்லா உயிருக்கும் இழைக்கும் துன்பமும் பசுவினால் புன்னியமக்களாம் என்று சடங்குகளை ஏற்படுத்தி அதன் பின்னால் செல்கீரார்கள் அதற்க்கு ஒரு சமூகம் ஊக்கம் கொடுத்து அதில் பிழைக்க தொடங்கி விட்டார்கள். தூய்மையுடைய உயிரே இறைவன். தூய்மை உடைய பதி (உயிர்) யாகிய இறைவனுக்கும், தூய்மையற்ற உயிராகிய பசு விற்க்கும் இடையில் பாசம் என்ற ஆசை உள்ளது இது தொடர்பான விளக்கவே ஆலயங்களில் தெட்சினாமூர்த்தி சிலையில் கட்டைவிரலும் ஆட்காட்டி விரலும் சேர்ந்தும் மற்றைய 3 விரல்கள் விலகியும் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. கட்டைவிரல் இறைவனாகவும், இறைவனை நோக்கி உயிர் என்னும் ஆள்காட்டி விரல் வலைந்தால் மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று விரல்களும் விலகும் என்பதை தெரிவிக்கவே இந்த அமைப்பு. பிரமாண்டமான கோபுரங்களையும் மண்டபங்களையும் கட்டிய நம் முன்னோர்கள் கர்பகிரகத்தை மட்டும் சிறியதாக இருட்டாக இருக்கும் வைகையில் உருவகபடுத்தியது இருட்டில் இருக்கும் இறைவன் விளக்கை ஏற்றினால் தெரிவது போல் உள்ளத்தின் இருட்டை அகற்றினால் இறைதன்மை அங்கே தோன்றும் என்பதை வலியுருத்தவே. இன்று இவை வெறும் சடங்குகளாகவும் சிலரின் பிழைப்பு கருவிகளாகவும் மாறிவிட்டது. இதைதான் திருமூலரின்

உள்ளம் பெருங்கோவில் ஊணுடம்பு ஆலயம்

வள்ளர் பிறனார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

கள்ள புலனைந்தும் காள மணிவிளக்கே

என்ற பாடல் உணர்த்துகிறாது. நாம் உள்வாங்கிக்கொண்ட கருத்துக்களை ஓரளவு தெரிய படுத்தியிருக்கிறேன்.

கருத்துகள் (0) / Read More

வெள்ளி, 25 மே, 2007 /

சே குவேரா வாழ்வும் வழிகாட்டுதலும்

"ஒரு குளிர் கால இரவில் நான் அவரை சந்தித்தேன், விவாதித்தோம் இரவு வரை விவாதித்துக் கொண்டேயிருந்தோம். பொழுது விடியும் போது எனக்கு தெரிந்து விட்டது எனது அடுத்த பயணம் அவரோடுதான், அவர் அறிவு கூற்மை மிக்கவராக, தன்னம்பிக்கை உள்ளவராக, அசாத்திய துணிச்சல் நிறைந்தவராக எனக்கு காட்சியளித்தார்" ஒரு காதலி தன் காதலன் குறித்து கொள்ளும் பெருமிதம் தெரிக்கும் இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் சாட்சாத் சேகுவேராவேதான். இது பிடல் காஸ்ட்டிரோ குறித்த தனது நினைவுகூறல். சேகுவோரா அடிப்படையில் ஒரு மருத்துவர், அவர் மருத்துவத்தை பணம் காய்க்கும் தொழிலாக பார்க்கவில்லை நோயுற்ற ஏழைகளுக்கு எளியவர்களுக்கு உதவவே பயண்படுத்திக் கொண்டார். சேகுவோரா ஒரு பிறவி புரச்சியாளர். புரச்சியாளர் என்ற சொல்லை வைத்து நம்ம ஊர் புரட்சி கலைஞ்சர், புரட்ச்சி தலைவியுடன் ஒப்பிட முனைந்தால் அது முற்றிலும் தவராகவே முடியும். பார்ப்பான், அந்தணன் என்ற சொல்லை வைத்துக்கொண்டே நம்மூரில் பலர் திருக்குறளையே வம்புக்கு இழுக்கும் போது நம்ப ஊர் புரச்சி தலைவர்கள், தலைவிகள், புரச்சி கலைஞ்சர்களின் புரட்சியுடன் நம்மில் சிலர் சேகுவேராவையும் அறிய முற்ப்பட்டால் அது சே வை கொச்சை படுத்தியதாக முடிந்துவிடும் என்பதால் புரட்சிக்கு பொருத்தமான வேரு சொல் இருந்தால் கூறுங்களேன் சே வை அப்படியே அழைப்போம். எனக்கு வேரு சொல் தெரியாததால் தான் அவரை பிறவி புரட்ச்சியாளர் என்று குறிப்பிட்டேன். சர்வாதிகாரத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து வந்த சேகுவேரா பிடல் காஸ்ட்டிரோ மென்கடா தாக்குதலை கியூபாவில் நடத்தியபோது லத்தின் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பிடலுக்கு சேகுவேரா பற்றி எதுவும் தெரியாது ஆனால் செகுவேரா பிடல் காஸ்டிரோ பற்றி அறிந்திருந்தார். சேகுவேரா கவுதிமாலாவில் தங்கியிருந்த போது கவுதிமாலவின் குடியரசு தலைவராக இருந்த ஜேக்கப்பே அர்பென்ஸ் குஸ்பன் அமெரிக்க நலனுக்காக ஆட்சி நடத்தும் தலைவர்களுக்கு மத்தியில் தொழிலாளர் நலனுக்கான சில திட்டங்களை அறிவித்தார். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி தொழிற்சங்கங்கள் நடத்த உதவி என்று சில திட்டங்களை நிறைவேற்ற துடித்தார். ஏகாதிபத்தியத்தை, சர்வாதிகாரத்தை எதிர்க்கிறோம் என்று யார் அழைத்தாலும் இதோ வருகிறேன் என்று கிளம்பும் செகுவேரா கவுதிமால இராணுவத்தில் சேர்ந்து ஏகாதிபத்தியத்திற்க்கு எதிராக போராட விழைந்தார் எனினும் அந்த முயற்ச்சி கைகூடவில்லை! அப்போதே சேகுவேராவை அந்த 25 வயதிலேயே அமெரிக்க அவரை கலககாரனாக கனித்து தனது உளவு அமைப்பை எச்சரித்திருந்தது. அமெரிக்கா கவுதிமாலவில் ஆட்சி கவிழ்ப்பை நடத்தியபோது அந்நாட்டு மக்கள் போராடுவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்த சேகுவேரா மனம் நொந்து கவுதிமாலவை விட்டு வெளியேறினார். மக்களிடம் ஆயுதம் இல்லாததே அவர்கள் போராடதற்க்கு காரணம் என்று உணர்ந்திருந்தார் அதற்க்காக கவலைப்பட்டார். சேகுவேரா கவுதிமாலவில் இருந்த போது கியூபர்கள் பலர் அவருக்கு நண்பர்களாக மாறினர். கியூப அரசியலை கூர்ந்து கவனித்தார். கியூப நண்பர்கள்தான் அவருக்கு சே என்று பெயரிட்டனர். அமெரிக்காவினால் திவிரவாதியாக, கலகக்காரனாக கற்ப்பிக்கப்பட்ட சே உண்மையில் சாமான்ய மக்களின் சகோதரன். சகோதரன் துன்பத்தில் இருக்கும் போது தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வார்களே அப்படித்தான் அவனும் சர்வாதிகாரத்திர்க்கு எதிராக, ஏகாதிபத்தியர்க்திற்க்கு எதிராக ஆர்த்தொழுந்தான் அடங்கி போய்விடவில்லை அடிமைப்பட விரும்பவில்லை, அவன் விரும்பியிருந்தால் கியூபாவின் வெற்றிக்குப் பிறகு அவன் அங்கு அடைய இயலாதது ஒன்றும் இல்லை ஆனாலும் அவன் ஆசை மிக கொண்டு அகம் மிக மகிழ்ந்து அத்தனையையும் அனுபவிக்க துடிக்கவில்லை! சேவின் மகனிடம் சில காலம் கழித்து சேவைப்போல் இருக்க விரும்புகிறீர்களா? என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது நான் மட்டுமல்ல ஒவ்வொரு கியூபனும் அப்படியே இருக்க விரும்புகிறோம் என்று கூறினான் என்றால் கியூபாவில் அதன் மீட்ப்பில், ஏகாதிபத்தியம், சர்வாதிகாரத்திர்க்கு எதிரான போரில் செ வின் பங்களிப்பு புரியும். அமெரிக்காவின் இந்னொரு மாநிலமாக இருந்திருக்க வேண்டிய கியூபா இன்று தனியரசாக தலைநிமிர்ந்து நடக்கிறது என்றால் அதில் காஸ்ட்ரோவுடன் சேவின் பங்களிப்பும் கனிசமானது. ஏகாதிபத்தியத்திற்க்கு எதிரக சர்வாதிகாரத்திற்க்கு எதிராக உலகத்தில் எந்த பகுதில் மக்கள் சிலிர்த்தெழுந்தாலும் அவர்களுகு உதவ தன்னையே அர்ப்பனிக்க தயாராகவே எப்போதும் இருந்தார் சே!



ஏகாதிபத்தியம், சர்வாதிகாரத்திற்க்கு எதிரான போரில் கவுதிமால அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கவிழ்க்கப்பட்டதால் மனம் நொந்து கவுதிமாலவில் இருந்து வெளியேரிய சே மெக்சிகோ வந்து சேர்ந்தார். அங்கு சிறிது காலம் புகைப்பட கலைஞ்சராக வேலைசெய்து பின் மருத்துவ ஆய்வகம் ஒன்றில் ஆய்வாலராக சேர்ந்தார். எப்படியாவது மேல் படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் பணம் சேர்க்க சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். சே வுக்கு கவுதிமாலவில் அறிமுகமான பெரு நாட்டை சேர்ந்த கில்டா கார்டியா 1955ல் மெக்சிகோ வந்து சேர்ந்தார். கில்டா கார்டியாவும் ஒரு போராளிதான். இவர்களை ஒன்றினைத்தது புரட்சிகர கருத்துகள்தான். கில்டா கார்டிய மார்க்சிய கம்யூனிச கருத்துகளில் கரை கண்டவர். சேவிடம் மார்க்சியம், ரஷ்யா, சீனா குறித்து அதிகம் விவாதித்திருக்கிறார். சே பின்னாளில் மார்க்சியம், கம்யூனிசம் என்று வாசிக்க தொடங்கியதற்க்கு ஒரு முக்கிய காரணம் கில்டா கார்டியாதான். மெக்சிகோவில் சே இருந்த போது தனது கியூப நண்பர் ஒருவர் மூலம் பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோ வின் அறிமுகம் கிடைத்தது. ரால் மூலம் தான் பிடலும் சேவும் 1955ல் சந்தித்தனர். அடுத்த சில மாதங்களுக்கு பின் கில்டா கார்டியாவை சே திருமணம் செய்துகொண்டார் இதில் பிடல் கலந்து கொள்ள வில்லை ஆனால் ரால் கலந்து கொண்டார். காவல் துறை, உளவு துறையின் கண்களில் படாமல் இருக்க வேண்டியதன் அவசியம் உணர்ந்தே பிடல் கலந்து கொள்ள வில்லை. பிடல் 1956 ஜூலை தாக்குதலுக்கு திட்டமிட்ட போது காஸ்ட்ரோ குற்த்து அப்போதைய கியூபா தலைவர் பாடிஸ்டா மெக்சிகோவிற்க்கு காஸ்ட்ரோ ஒரு ஆபத்தான கம்யூணிஸ்ட் என்று தகவல் அனுப்பியதால் கைது செய்யப்பட்டார். அவருட்ன் சே வும் கைதானார். லஞ்சத்திற்க்கு பெயர் போன மெக்சிகோ காவல் துறைக்கு 25000 டாலர் லஞ்சம் கொடுக்கவும் தயாராக இருந்தனர். தெரிந்தவர் தெரிந்தவருக்கு தெரிந்தவர் என்றும் முயற்றும் விடுதலை கிடைக்கவில்லை இந்த இக்கட்டான நிலையில் மெக்கிகோவின் முன்னால் குடியரசு தலைவர் லாசாரோ கார்டனஸ் உதவ முன்வந்து மெக்சிகோ காவல் துறையிடம் பேசினார் சே வும் காஸ்ட்ரோவும் விடுவிக்கப்பட்டனர். மெக்சிகோவிலிருந்து கிரான்மா கப்பலில் ஜூலை தாக்குதலுக்கு பயணப்பட்ட போதே சே வின் பணி தொடங்கிவிட்டது. ஆஸ்துமாவால் தான் பாதிகப்பட்டிருந்த போது சக போரளிகளின் வந்தி காய்ச்சல் என்று மருந்துபையை தூக்கி கொண்டு மருத்துவம் பார்க்க தொடங்கிவிட்டார். மரங்கள் நிறைந்த மலைப்பகுதியான சியாரா மேஸ்த்ரா பகுதிக்கு புரட்சி குழு வந்து சேர்ந்தது. சே குவேரா ஒரு கையில் துப்பாக்கி மறு கையில் மருந்துப்பை இரண்டையும் சுமந்துகொண்டு மலை ஏறுவார் திடீரென்று இருமுவார். ஆஸ்த்துமா தீவிரமடைந்திருக்கும் அப்படியே அமர்ந்து விடுவார். சில சமயம் வலியால் துடிப்பார் சிறிது நேரத்திற்க்கெல்லாம் துள்ளிக் குதித்து மலையேறக் கிளம்பிவிடுவார். எதிர்பாராமல் நடந்த தாக்குதலில் புரட்சிக்குழு சிதறியது. டிசம்பர் 13ல் ஒரு விவசாயி வீட்டில் நீண்ட நாட்களுக்கு பின் தனது குழுவினருடன் உணவு அறுந்தினார். நீண்ட நாட்களுக்கு பின் சாப்பிட்டதால் கடுமையான வயிற்றுவலி ஏற்ப்பட்டு அவதிப்பட்டார். அங்கேயே மூலிகை வைத்தியம் செய்து கொண்டார். சிறிது காலம் ரோசாபால் என்ற பாதிரி வீட்டில் தங்கினார் அந்த பாதிரிக்கு சே வை பிடித்துப் போய்விட்டது. அவர்கள் கியூபா மக்களுக்காகதான் போராடுகிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு உதவினார். அவர்களுக்காக ஜெபம் செய்தார். அங்குதான் செகுவேரா தன்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக ஜெபித்தார். மீண்டும் சேகுவேராவிற்க்கு உடல் நிலை மோசமாகிவிட அந்த பாதிரி அவரை அருகில் இருந்து கவணித்துக்கொண்டார். சேகுவேராவுக்காக அடிக்கடி தந்தி கொடுத்துவந்ததால் காவல்துறையிடம் மாட்டிக்கொண்டார் அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் காவல்துறையால் கைப்பற்றப் பட்டது. அப்போது சேவுக்கும் குண்டு காயம் ஏற்ப்பட்டது. டிசம்பர் 21ல் சே காஸ்ட்ரோவை சந்தித்தபோது இவற்றை சே கூறியபோது ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதால் சேவை காஸ்ட்ரோ கடிந்துக்கொண்டார். அப்போதே புரட்சி வெற்றி பெற்றதாக கருதிக்கொண்டு கியூபாவின் மேம்பாட்டிற்க்கான திட்டங்களை விவாதிப்பார்கள். சேகுவேரா திட்டங்களை விளக்குவார் பின்னர் இருவரும் விவாதிப்பார்கள்........


எம் 1 ரக துப்பாக்கி குண்டு என் காலில் புகுந்து அங்கேயே தங்கிவிட்டது தற்ச்சமயம் நான் நடக்க இயலாத நிலையில் உள்ளேன் ராமிரோ படைக்கு தலைமை தாங்கி பெரும்பாலவனர்களுடன் ஓர் இடத்திற்க்கு போய் இருக்கிறார். எங்களுக்கு உடனடியாக 30.06 மற்றும் 45 தானியியங்கிகள் தேவைப்படுகின்றன. நான் இங்கு அதிரடி தாக்குதல் ஒன்றை தயாரித்துவிட்டு பாதுகாப்பாக இருக்கிறேன். உங்களது அறிவுரையை அலச்சியம் செய்ததற்க்காக வருந்துகிறேன். ஆனால் கடுமையான களைப்பின் காரணமாக நம் படையினரின் தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் நான் முன்னனியில் இருக்க வேண்டியது அவசியம் என்று கருதினேன். தேவையான அளவு எச்சரிக்கையாக இருந்தும் காயம் ஏற்ப்பட்டது ஒரு விபத்தே. ஒரு தலைவனின் தளபதியின் பண்புகளுக்கு ஆளுமைக்கு எடுத்துக்காட்டான இந்த வரிகள் சே வால் காஸ்ட்ரோவுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் வரிகள். 1957ல் சியார மேஸ்த்ராவின் பெரும் பகுதி போராளிகளின் கட்டுபாட்டுக்குள் வந்துவிட்டது. சே குவேராவிற்க்கு தனியாக ஒரு படை கொடுக்கப்பட்டிருந்தது. விமானா தாக்குதல் நடந்தாலும் கூட சேகுவேரா கவலைப்படாமல் அவர் வேலையை செய்துக்கொண்டிருப்பார். சுருட்டு பிடித்தப்படி விமானங்களை வேடிக்கைப் பார்ப்பார். போர் என்றால் முதல் வரிசையில் நிற்க்கும் சே இரக்கம் அன்பு போன்ற பண்புகளையும் இழக்காதவராக இருந்தார். போரில் கைதாகும் எதிரிகளை அன்பாகவும் மரியாதையாகவும் நடத்துவார். கைதானவர்கள் காயம் பட்டிருந்தால் அவர்களுக்கு தாமே மருத்துவம் பார்ப்பார் அந்த சமயங்களில் சேகுவேரா மருத்துவராகவும் கைதிகள் நோயாலிகளாகவும் மட்டுமே இருப்பர். புரட்சி வெற்றிப் பெற்று புரட்சிக்குழு கவானாவை நோக்கி சென்ற போது காஸ்ட்ரோ கையசைத்துக்கொண்டே சென்றார். சேகுவேரா வழியெங்கும் விசாரனை கூட்டங்களை நடத்தினார். பாடிஸ்டா அரசில் விவசாயிகளை கொடுமை படுத்தியவர்கள் தண்டிக்கப்பட்டனர். விவசாய பெண்களை மானபங்கம் செய்தவர்கள் தேடிபிடித்து தண்டிக்கப்பட்டனர். விவசாயிகளின் நிலம் நிலப்பிரப்புக்களிடம் இருந்து எடுத்து விவசாயிகளிடம் ஒப்படைத்தார். கியூபா கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. மாற்றத்தை விரும்பாத சர்வாதிகாரம் ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்த குத்தகைதாரரான அமெரிக்கா கியூபா மீது பொருளாதர தடையை ஏற்ப்படுத்தியது. கியூபாவின் பொருளாதரம் கேள்விக்குறியான இக்கட்டான நேரத்தில் சேகுவேரா கியூபாவின் தேசிய வங்கி தலைவரானார். அவருக்கு பணத்தாளில் சே என்று கையெழுத்திடும் அதிகாரம் வழங்கப்பட்டது அதற்க்கு முன்னரே அவருக்கு கியூப குடியுறிமை வழங்கப்பட்டிருந்தது. சேகுவேரா தொழில் துறை அமைச்சராக பொருப்பு ஏற்றுக்கொண்டார். பொருளாதரத்தை மேம்படுத்த சே வுக்கு வண்டி வண்டியாக கணவு இருந்தது. சகப்போராளியான அலஸ்டா மார்சை கில்டா கார்டியாவின் ஒப்புதலுடன் திருமணம் செய்துக்கொண்டார். நான்கு குழந்தைகளுக்கு அப்பாவாகவும் மாறியிருந்தார். அமைச்சர் ஆன பிறகும் அவரிடம் எந்த மாற்றமும் ஏற்ப்படவில்லை. ரேசன் கடைகளில் வரிசையில் நின்று பொருள் வாங்கினார். அரசாங்க வண்டிகளை சொந்த உபயோகத்துக்கு பயண்படுத்தவில்லை. குறுகிய தூரம் சென்றால் நடந்தே சென்றார். அதிக தூரம் என்றால் பேருந்தில் பயணிகளுடன் பயணியாக பயணிப்பார். நம்மூர் சாதாரன வார்டு கவுன்சிளர்களும் அவர்தம் குடும்பமும் அடிக்கும் லூட்டிகளையும், அரசு அதிகாரிகளின் ஆனவத்தையும் அவர்தம் குடும்பமும் உற்றார் உறவினர்களும் அரசு சொத்துக்கு சொந்தம் கொண்டாடும் போக்கையும் ஒப்பிட்டால் சே-வை புரிந்துக்கொள்ளலாம். நம்ம ஊர் தலைவர்களி ஒப்பிட முடியாத வெகு தூரத்தில் இருப்பவர் சே என்றால் மிகையாகாது. ஆனாலும் நம்மூரிலும் சேகுவேராக்கள் இல்லாமல் இல்லை ஆயிரம் பதினாயிரம் சேக்கள் இங்குண்டு. ஆனால் அவர்கள் அடையாளம் காட்டப்படவில்லை, அறியபடவில்லை. நமக்கு நம்மவர்களும் நமது பத்திரிக்கைகளும் அடையாளம் காட்டுவது சினிமா கவர்ச்சிகளையும் வேடதாரிகளையும்தான். நாமோ சினிமா கவர்ச்சியில் மதி மயங்கி வாரிசுகளின் வால் பிடித்து தலைவர்களின் எச்சங்களிலிருந்து விழுந்த இடங்களை விழுந்து கும்பிட்டும் வேண்டிக்கொள்கிறோம். இங்கு எத்தனை எத்தனை சே க்கள் கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று கடையைக்கட்டினார்களோ?

கருத்துகள் (0) / Read More

/

இயற்க்கை படிவமா? இராமர் பாலமா?

மத நம்பிக்கையாளர்களின் கருத்துப்படி இராமன், தான் இறைத்தன்மை உடையவன் என்பதை அறியாதவன். கண்ணன் அதை உணர்ந்தவன். இறைவனே மனிதனாக பிறந்தாலும் அவன் இங்கு மனிதனாக வாழும் போது மனிதர்களுக்குள்ள அனைத்து இயற்க்கை விதிகளுக்குட்பட்டே செயல் பட வேன்டும் என்பதால் தானே இராமன் நாட்டை துறந்து காட்டுக்கு சென்று காதல் மனைவியை பறிகொடுத்து கஷ்டப்பட்டது உணர்த்துகிறது. கண்ணனால் துரியோதனனை ஒரு நொடிக்குள் வீழ்த்தியிருக்க முடியாதா? ஏன் அவ்வாறு செய்யவில்லை? இயலாமையா? அல்லது இயற்க்கையாக மானிதனின் வலிமைதான் தனக்கும் பொருந்தும் என்று உணர்ந்ததாலா? இறைவனாகவே இருந்தாலும் மனிதனாக பிறந்த அல்லது அவதரித்தவர்கள் மனிதன் தன் முயற்ச்சிக்கு தகுந்த வாழ்வை வாழ வேண்டும் என்று வலியுருத்த வந்தவர்கள் எப்படி 60 லட்சம் அல்லது 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுண்ணத்தால் 50 - 60 கிலோ மீட்டருக்கு கடலை தூர்த்து பாலம் கட்டியிருக்க முடியும். அல்லது விரும்பியிருப்பார்கள்? சுண்ணாம்பை கொண்டு கட்டிடம் கட்டுவது என்பது இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்குட்பட்ட அறிவியல் சார்ந்த வரலாற்று உண்மை. கடல் கோளல் அழிக்கப்பட்டது லெமூரியா கண்டம் என்ற வரலாற்று உண்மையையை உணர்ந்து இராமயணத்தை நோக்கினால். பழங்கால தமிழகத்தில் முடியரசர்களின் எல்லைகளாக ஆறுகள் விளங்கியது போல் ஏதேனும் சிரிய ஆறோ அல்லது சிரிய வாய்க்காலோ தான் தமிழகத்தையும் இலங்கையையும் பிரித்திருக்க முடியும் அது பகருளி ஆறாகக்கூட இருக்கலாம். அந்த ஆற்றை அல்லது கால்வாயை தூர்த்துதான் இராமன் இலங்கைக்கு சென்றிருப்பான். கவிஞ்சர்கள் மிகை படுத்தும் போது கடல் போன்ற ஆறு என்பது போல கடலாக கற்பனையை விரித்திருக்கலாம். செயற்க்கை கோளால் ஆராய்ந்து சுன்னாம்பு படிவம் இலங்கைக்கும், தமிழகத்திற்க்கும் இடையில் இருப்பதாக கூறியவர்களே அது பாலத்தின் படிமங்கள் அல்ல இயற்க்கை பாறைகள் என்று அறிவித்த பிறகும். சில மதவாதிகள் இராமர் பாலம் என்று கூறி அதன் மூலம் இராமரை கடவுளாக கருதுவோரின் உணர்ச்சிகளை தூண்டுவது ஏன்? இதுதான் ஆரிய சூழ்ச்சியோ? மாயையோ? அதிக்கத்தை தக்க வைக்கும் முயற்ச்சியா? தமிழக அரசியலில் அங்கீகாரம் பெறும் முயற்ச்சியா? இன்றைய நமது தலைவர்களையே சிலர் பலர் இதய தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும், கன்னித்தாயாகவும், குடும்ப தெய்வமாகவும் கொண்டாடி குடும்பம் வளர்க முயன்றது போல்! முயல்வது போல்! கவர்ச்சியில் மயங்கி குஷ்புவுக்கும் கோவில் கட்டியது போல் அன்றும் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பியவர்கள் அண்டி பிழைக்க விரும்பி இராமனுக்கு கோவில் எடுத்து அதுவே காலப்போக்கில் கண்கண்ட தெய்வமாக மறியிருக்குமோ? நடுகல் வழக்கம் நம்மிடையே உள்ளதுதானே!! சொத்துள்ள வருமானம் உள்ள கோவில்களில் கடவுளை காட்டுபவர்கள் வருமானம் இல்லாத இடங்களி கண்டு கொள்ளாதது ஏன்? தோழர்களே நம்மில் சிலருக்கு மதவாதிகளும் மடாதிபதிகளும் கடவுளை காட்டவில்லை, கோவிலை காட்ட வில்லை ஏன் அந்த பக்கமே திரும்ப விடவில்லை! ஆனாலும் கடவுளை கல் என்ற பெரியாரே கடவுளை காட்டினார்!! உணர்ந்தால் எழுவோம்! மறுத்தால் வீழ்வோம்!!

அண்ணாவின் பெருங்கனவை

அறிஞ்சர்களின் கருத்ததுவை

மெல்லப் போராடி மெதுவாக கொணர்ந்ததனை

கள்ள கருத்துக்களை பரப்பி

விரைந்து தடுக்க விரும்புவது யார்? ஏன்?

அரசியலில் பிழைப்பதற்க்கே

ஆண்டவனின் பெயரை அழகாகப்

பயண்படுத்தும் ஆரிய மாயைதானே?

அதில் அண்ணாவின் முகமூடி அனிந்தவரும் மருவரோ?

மாநிலமெங்கும் மதவெறியை பரப்பியதில்

மானுடத்தின் தலைவனாக முயல்வோரும் மாருவரோ?

ஆனாலும் சொல்லுகின்றோம் அவருக்கிங்கே

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!

கருத்துகள் (0) / Read More